- நன்கொடை முகாம்
- சின்னமனூர்
- தேனி மருத்துவத் துறை
- தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- மாநகர
- நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- சின்னமனூர் முத்தாலம்மன் கோவில்
சின்னமனூர், பிப். 20: சின்னமனூர் முத்தாலம்மன் கோயில் அருகே நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் தேனி மருத்துவத்துறை மற்றும் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து விபத்துகளில் சிக்குபவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் பொருட்டு ரத்த தான முகாம் நடந்தது.
இந்த முகாமில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ரத்த பிரிவு டாக்டர் பிரியா, டாக்டர் ரத்தினம் குழுவினர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரிடம் இருந்து சுமார் 54 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. இந்த முகாமில் அரசு மருந்தாளுநர் ரஞ்சித்குமார் இந்த 52 வது முறையாக ரத்த தானம் வழங்கினார்.
