மதுரை: மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட முதல் போக விவசாய பணிகளுக்காக, வைகை அணையிலிருந்து கடந்த ஏப்ரலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒத்தக்கடை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள 9வது கிளை வாய்க்கால் வழியாக செல்கிறது. இக்கால்வாயில் ஒத்தக்கடை முதல் மதுரை – மேலூர் நெடுஞ்சாலையில் உள்ள நரசிங்கம் பிரிவில் உள்ள மழைநீர் வடிகால் வரை பல இடங்களில் குப்பை தேங்கி கிடக்கிறது.
இந்த கால்வாயில், இறுதிக்கட்ட அறுவடை பணிகளுக்காக அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை தண்ணீர் திறக்கப்படும் என, தெரிகிறது. இதனால் கால்வாய் முழுவதும் தேங்கி கிடக்கும் குப்பைகளால், நீரின் போக்கு பாதிக்கப்படும் என்பதால், அகற்ற அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
