×

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பேரையூர், பிப். 20: பேரையூர் அருகே சின்னப்பூலாம்பட்டி கிராமத்தில் நேற்று தனியார் செல்போன் நிறுவனம் சார்பில், புதிய டவர் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என்றும், இதிலிருந்து வெளியேறும் கதிர்களால் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினர்.

மேலும் தனிநபர் இடமாக இருந்தாலும் ஊருக்கு வெளியே அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி, டவர் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பணிகளைமேற்கொள்ள வந்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

 

Tags : Peraiyur ,Chinnapoolampatti ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்