வடமதுரை, பிப்.20: வடமதுரை அருகே சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வடமதுரை அருகே உள்ள அய்யலூர், தென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஐசுரேஷ் பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சென்றனர்.
அப்போது சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த சவேரியார் பட்டியைச் சேர்ந்த கொடியரசு(22), வேம்பார்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(35), எட்டிக்குளத்துபட்டியைச் சேர்ந்த ராமசாமி(61), வைரப்பிள்ளை பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(43), ஊராளிபட்டியைச் சேர்ந்த முத்துவீரன்(42) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
