×

தமிழ் தாத்தா உவேசா பிறந்தநாள் இலக்கிய பெருமன்றம் மாலை அணிவித்து மரியாதை

வலங்கைமான். பிப். 20: தமிழ் தாத்தா உவேசா பிறந்தநாள் கலை இலக்கிய பெருமன்றம் சார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருவாரூா் மாவட்டக்குழு சார்பில் உவேசாமிநாதய்யர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான உத்தமதானபுரம் நூலகத்தின் கீழ்புரத்தில் அமைந்துள்ள உவேசா மணிமணடபம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது,

இந்நிகழ்வில் மாநிலகுழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் மாவட்டச்செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முனைவர் மணிகனேசன், மாநிலக்குழு குரு செல்வமணி, மாவட்ட துணைத்தலைவர் மாவட்டக்குழு உறுப்பினர் வாசுபாண்டியன் உள்ளிட்டோர் உவேசா பெயரில் இயங்கும் நூலகர் கோட்டூர் மற்றும் அருகில் உள்ள அரசு பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Tags : Tamil Dadha Uvesa ,Literary Society ,Valangaiman ,Tamil Nadu Arts and Literature Society ,Thiruvarur District Committee ,Uttamadanapuram ,Uvesamini Nath Iyer ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்