- நீடாமங்கலம்
- நீடாமங்கலம் ஒன்றிய சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை
- நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
- திருவாரூர் மாவட்டம்…
நீடாமங்கலம், பிப். 20: நீடாமங்கலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நீடாமங்கலம் ஒன்றிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட வர்களுக்கு 18 சீர்வரிசை பொருள்களும் ,ஐந்து வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டது. மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
