×

திருத்துறைப்பூண்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை

திருத்துறைப்பூண்டி, பிப். 20: திருத்துறைப்பூண்டி நகராட்சி பூண்டு வெளி சாய் நகரில் ரூ. 1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் 2.50 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு துவக்க விழா நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஆணையர் கிருத்திகா ஜோதி தொடங்கிவைத்தனர்.  இதில் நகராட்சி துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், நகராட்சி பொறியாளர் வசந்தன்,

பொதுப்பணி மேற்பார்வையாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் லட்சுமி அய்யப்பன், கார்த்தி மற்றும் அரசு முதுநிலை ஒப்பந்தக்காரர் ஓம் சக்தி கண்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் கார்த்தி, நிர்வாகிகள் முருகேசன், வாசுதேவன், மற்றும் பூண்டு வெளி கிராமத்தினர் கலந்து கொண்டனர். இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் நகராட்சி வார்டு எண்கள் 19, 20,21, 24 பகுதி மக்கள் பயன் பெறுவார்கள்.

 

Tags : Thiruthuraipoondi ,Pundu Veli Sai Nagar, Thiruthuraipoondi Municipality ,Municipal Council ,Kavita Pandian ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்