- வருவாய் கிராம ஊழியர்களின்
- திருவனம்
- ஒரத்தநாடு
- தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்
- வருவாய்
- தாலுகா அலுவலகம்
- திருவோணம், தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு, பிப்.20: திருவோணத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நேற்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், காலம் முறை ஊதியம் மற்றும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தலைவர் போத்தியப்பன், செயலாளர் சரவணகுமார், பொருளாளர் சுரேஷ், மகளிர் அணி தலைவி அதிர்ஷ்டலட்சுமி மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
