×

திருமயத்தில் கிராம உதவியாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

திருமயம். பிப்.20: திருமயத்தில் கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக திருமயம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம உதவியாளர்கள் திருமயம் தாலுகா அலுவலகம் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் கிரேடு அடிப்படையில் ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திருமயம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Village Helpers Association ,Madurai ,Federation of Rural Assistants Associations ,Tamil Nadu ,Federation of Tamil Nadu Rural Assistants Associations ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்