×

மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டி பறிமுதல்

தா.பழூர், பிப்.20: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவிந்தபுத்தூர் பகுதிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அப்பகுதிக்குச் சென்ற போலீசார் கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுபடுகை பகுதிகளில் இருந்து சாத்தம்பாடி நோக்கி வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால் போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்பு மாட்டு வண்டியை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் இருந்து சாத்தம்பாடி பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. பின்பு மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

 

 

Tags : Tha.Pazhur ,Vikramangalam Police ,Sub-Inspector ,Kamaraj ,Ariyalur district ,Govindaputhur ,Kollidam ,Govindaputhur… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்