×

புத்தூர் அரசு கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கொள்ளிடம், பிப்.20: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சசிகுமார் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார் வரவேற்றார். முகாமில் சென்னையை சேர்ந்த ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம் பங்கேற்று நேர்காணல் நடத்தியது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். அண்ணாமலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் இணை இயக்குனர் முனைவர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு 31 மாணவியருக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதில் நிறுவனத்தின் மனித வள மேலாளர் கார்த்தி,வணிகவியல் துறை தலைவர் ராஜராஜன், கணினி அறிவியல் துறை தலைவர் பிரியா மற்றும் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி அபிராமி நன்றி கூறினார்.

 

Tags : Puttur Government Arts College ,Kollidam ,Puttur MGR Government Arts and Science College ,Mayiladuthurai district ,Dr. ,Sasikumar ,and Training Center ,Dr.… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்