×

விவசாயத்திற்கு மின் இணைப்பு சீனியாரிட்டிபடி தான் கொடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ பி.தங்கமணி பேசுகையில், \\” இப்போது விவசாயத்திற்கு மின் இணைப்பு கொடுப்பது, ஏற்கனவே 2013-14ம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படாமல் இருக்கின்றது.
ஆனால் இப்போது மின் வாரியம் 2020-21லிருந்து காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக விவசாயிகளின் மத்தியில் ஒரு பேச்சு இருக்கின்றது. எனவே, ஏற்கனவே 2013-14ம் ஆண்டிலிருந்து சீனியாரிட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமா அல்லது இந்த ஆட்சி வந்ததற்குப் பிறகு பதிவு செய்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுமா, தட்கல் முறை தற்போது இருக்கிறதா, இல்லையா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘உறுப்பினர் மூத்த அமைச்சராக இருந்தவர். அதுவும் மின்துறையையே கையாண்டவர். அவருக்கு தெரியாதது இல்லை. உரிய சீனியாரிட்டிபடி தான் கொடுக்கப்படும். இடையில் எங்கும் மாற்றிக் கொடுப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. அதேபோல, தட்கலுக்கும் இப்போதும் விண்ணப்பம் பெறப்பட்டிருக்கிறது. அதனைக் குறைப்பதற்கான நடைமுறை வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வழங்கப்படும்’ என்றார்.

Tags : Minister ,Sivashankar ,Chennai ,AIADMK ,MLA ,P. Thangamani ,Electricity Board ,
× RELATED உன்னத திட்டங்களை செயல்படுத்தும்...