×

முன்னாள் முதல்வர்களுக்கு சிலை சட்டசபையில் ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், இந்திய நாடாளுமன்றத்தில் முன்னாள் பாரத பிரதமருக்கு சிலை வைக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. அதைபோல தமிழகத்தில் முன்னாள் முதல்வராக இருந்தவருக்கும், மறைந்த முதல்வருக்கும், இங்கு சிலை அமைக்க இந்த அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதில் அளித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

Tags : OPS ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Tamil Nadu Legislative Assembly ,Prime Minister of ,India ,Indian Parliament ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED உன்னத திட்டங்களை செயல்படுத்தும்...