×

சிறை கைதி உயிரிழப்பு

புழல்: புழல் தண்டனை சிறையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், சென்னை மேற்கு சைதாப்பேட்டை, சாரதி நகரை சேர்ந்த ரங்கநாதன் (76) என்பவர், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி முதல் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கைதி ரங்கநாதனுக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு, சிறை காவலர்கள் அழைத்துச்சென்று சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Puzhal ,prison ,Ranganathan ,Sarathi Nagar, Saidapet, West Chennai ,Saidapet All Women Police Station ,
× RELATED உன்னத திட்டங்களை செயல்படுத்தும்...