×

உயரழுத்த மின் கம்பி மாற்றும் பணி தீவிரம்

ஆறுமுகநேரி, பிப். 20: ஆறுமுகநேரி பகுதியில் மின்சாரம் தடையின்றி சீராக விநியோகம் செய்வதற்காக உயரழுத்த மின் கம்பி மாற்றும் பணி, மின்வாரியம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. ஆறுமுகநேரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயரழுத்த மின்கம்பிகள் அமைக்கப்பட்டது. இதில் உள்ள கம்பிகளின் மின் கடத்தல் திறன் குறைவாக இருந்துள்ளது . இதனால் இப்பகுதிகளில் அவ்வப்போது மின் விநியோகம் தடைபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆறுமுகநேரியில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் தடையின்றி கிடைப்பதற்கு திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கர் அறிவுறுத்தலின் பேரில், உதவி செயற்பொறியாளர் ஜெபராஜ் ஆலோசனைப்படி, ஆறுமுகநேரி உதவி மின் பொறியாளர் ஜெபஸ் சாம் தலைமையில் மின்வாரிய பணியாளர்கள் மூலம் அதிக மின் கடத்தும் திறன் கொண்ட தரமான உயரழுத்த மின் கம்பி மாற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணியானது கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆறுமுகநேரியில் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட நேரம் மின் இணைப்பு தூண்டிக்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பணியானது இன்னும் 5 நாட்களுக்குள் முடிவடையும் எனவும், அதன் பின் அவ்வப்போது ஏற்படும் மின் தடைகள் தவிர்க்கப்பட்டு சீரான மின் விநியோகம் கிடைக்கும் எனவும் மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது .

Tags : Arumuganeri ,Electricity Board ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்