- மத்திய கூட்டுறவு வங்கி
- தூத்துக்குடி
- சுதாகர்
- தெற்கு மாவட்ட அ.தி.மு.க
- ஓடுனாராணி
- மாவட்டம்
- அண்ணா தொழிற்சங்கம்
- ஜனாதிபதி
- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
தூத்துக்குடி, பிப். 20: தூத்துக்குடியில் இன்று(20ம் தேதி) மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுதாகர் இல்லத்திருமண விழா நடைபெறுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்ட செயலாளரும், அண்ணா தொழிற்சங்க தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான சுதாகர் -ஷர்மிளா சாந்தகுமாரி ஆகியோரது மகள் சுனேஷா, ஆறுமுகநேரி ஜவஹர் – தங்க கல்யாணி ஆகியோரது மகன் ரஞ்சித் ஆகியோரின் திருமணம் தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் இன்று(20ம் தேதி) காலை 9.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி, கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
