×

டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி

மதுரை, பிப். 19: மதுரை ரெட் கிராஸ் சார்பில் நடந்த அரசுத்துறையில் உள்ள டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது. அரசு பயிற்சி பள்ளி துணை இயக்குனர் பழனிவேல் சுந்தரம் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

விபத்து காலங்களில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, ரத்த இழப்பு தடுப்பு முறைகள், கட்டு போடுதல், மாரடைப்பின்போது செய்யவேண்டியவை, வலிப்பு, பாம்புகடி, நாய்க்கடி போன்றவற்றுக்கான முதலுதவிகள் உள்ளிட்டவை குறித்து, ரெட்கிராஸ் பயிற்றுநர் ராஜ்குமார் பயிற்சி வழங்கினார். மேலும், விபத்தின்றி வாகனம் ஓட்டுவற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், விபத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டிய, ‘கோல்டன் ஹவர்’ எனும் நேரத்தின் அவசியம் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

 

Tags : Madurai ,Madurai Red Cross ,Government Training School ,Deputy Director ,Palanivel Sundaram ,Coordinator ,Muthukumar ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்