×

ஒட்டன்சத்திரத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்ட ஆலோசனை

ஒட்டன்சத்திரம், பிப். 19: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கால்நடை மருத்துவர் பாலகுமாரன் பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 1960ன் கீழ் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.  இதில் பேரூராட்சி அலுவலர்கள், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், தனியார் கல்வி நிறுவனத்தினர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Ottanchathram ,Ottanchathram Municipal Office ,Municipal Commissioner ,Swetha ,Health Inspector ,Karthikeyan ,Balakumaran ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்