பேராவூரணி, பிப்.19: பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு தேர்வுக்கான எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு பிளஸ்2 தேர்வு எழுத உள்ள மாணவிகள் 390 பேருக்கு பேனா, பென்சில், நோட்டு, ஸ்கேல் உள்ளிட்ட தேர்வுக்கு தேவையான எழுது பொருட்களை நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு நலச்சங்க இளைஞரணி மாநில தலைவர் தெட்சணாமூர்த்தி வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
