- தஞ்சாவூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி
- தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்…
தஞ்சாவூர், பிப்.19: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 11வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, யுஜிசி நிர்ணயித்த ரூ.57,800 ஊதியத்தை கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். பி.எப், இபிஎப் வழங்க வேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தஞ்சையில் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
