- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை துணை இயக்குநர் மருத்துவ சேவைகள் தொழுநோய் அலுவலகம்
- துணை இயக்குநர்
- சிவகாமி…
புதுக்கோட்டை, பிப்.19: புதுக்கோட்டையில் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஊனத்தடுப்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகத்தில் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான ஊனத்தடுப்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை இயக்குனர் சிவகாமி தலைமை வகித்து தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகள் வழங்கினார்.
மாவட்ட இணை இயக்குனர் ஸ்ரீப்ரியா தேன்மொழி, மருத்துவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் மாவட்ட அளவில் மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள் செந்தில்நாதன், ராமநாதன், ராஜேந்திரன், மோசஸ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சித்தையா நன்றி கூறினார்.
