×

அரியலூர் அரசு கல்லூரி விடுதி மாணவிகளுக்கு, போலீஸ் அக்கா திட்டம் அறிமுகம்

ஜெயங்கொண்டம், பிப்.19: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கும் சமூக நீதி விடுதிக்கு நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேரில் சென்று மாணவிகளிடம் போலீஸ் அக்கா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் போலீஸ் அக்கா திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் இத்திட்டம் எவ்வாறு அவளுக்கு பயனுள்ளதாக அமையும் என விளக்கி கூறினார்.

மேலும் காவல் உதவி செயலி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள் 1098,181 குறித்தும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் , அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல், அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் , மகளிர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் உடன் இருந்தனர்.

 

Tags : Ariyalur Government College Hostel ,Jayankondam ,Ariyalur District ,Superintendent ,Vishwesh P. Shastri ,Social Justice Hostel ,Ariyalur Government Arts and Science College ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்