×

வெப்பம் காரணமாக அதிகம் விற்பனையாகும் கரும்பு ஜூஸ்

அரியலூர், பிப். 19: மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் வழக்கமாகவே கடும் வெப்பம் நிலவும் காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அதில் முக்கியமாக அரவக்குறிச்சி, பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் வழக்கத்தைவிட முன்கூட்டியே அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பழங்கள், இளநீர், குளிர்பானங்கள் மற்றும் ஜூஸ்களை அதிகமாக அருந்தி வருகின்றனர். அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு சாறு (கரும்பு ஜூஸ்) பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயற்கை சத்து நிறைந்தது கரும்பு ஜூஸ். கரும்பு ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் எலுமிச்சை, இஞ்சி போன்ற இயற்கை சேர்க்கைகள் கலந்து தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதால், இது வெப்பத்தை தணிக்கும் சிறந்த பானமாக மக்கள் விரும்பி அருந்துகின்றனர்.

 

Tags : Ariyalur ,Ariyalur district ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்