×

மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்

மயிலாடுதுறை,பிப்.19: மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 11 நாளாக வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 11 நாளாக வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொறுப்பாளர் கனிமொழி தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரியும், சம வேலைக்கு தகுந்தாற்போல் சம ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும், யுஜிசியில் தகுதி பெறுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரி வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் காலைவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : Mayiladuthurai ,Honorary Lecturers Association ,Dharmapuram Gnanambika Government Women's Arts College ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்