நாகப்பட்டினம்,பிப்.19: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் 14 மனுக்கள் பெறப்பட்டது. நாகப்பட்டினம் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
பொதுமக்களை எஸ்.பி சந்தித்து குறைகளை கேட்டறிந்து 14 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
