- திரேஸ்புரம், தூத்துக்குடி
- நெல்லை
- Threspuram
- மீன்
- ஏல வீடு
- தூத்துக்குடி
- நெல்லை அருணா கார்டியாக் கேர்
- தூத்துக்குடி மீன்வளத்துறை
- அருணா…
நெல்லை, பிப். 19: நெல்லை அருணா கார்டியாக் கேர் மற்றும் தூத்துக்குடி மீன் வளத்துறை சார்பில் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் மீனவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். முகாமில் பங்கேற்ற மக்களுக்கு அருணா கார்டியாக் கேர் மருத்துவக்குழுவினர் உயரம், எடை, ரத்த அழுத்தம், சுகர், இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் புஷ்ரா ஷாப்னம், மீன் துறை ஆய்வாளர் பெல்சி ஷிபானி, திரேஸ்புரம் மீனவ சங்கச் செயலாளர் ஜேம்ஸ், சிஇஓ ராமன், தூத்துக்குடி அருணா கார்டியாக் கேரை சேர்ந்த ஜாக்குலின் சுபா, ஈஸ்வரி திருமலையப்பன் உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றினர். முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அருணா கார்டியாக் கேர்க்கு நன்றி தெரிவித்தனர்.
