×

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர் பைக் பிரசாரம் மார்த்தாண்டத்தில் வரவேற்பு

மார்த்தாண்டம் பிப். 19: பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி வங்கி ஊழியர் பைக்கில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மார்த்தாண்டத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுடைமையான வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சேலத்தைச் சேர்ந்த ஷாதாத் நாடு முழுவதும் பைக்கில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். 8000 கிலோ மீட்டர் பயணத்தை கடந்த மாதம் 30 ம் தேதி சேலத்தில் துவக்கினார். சென்னை, ஆந்திரா,தெலங்கானா, கிழக்கு மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், உத்திராகாண்டு, டெல்லி, மும்பை, கர்நாடகா, கேரளம் வழியாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிப்ரவரி 22 ம் தேதி கரூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். பைக் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஷாதாத் நேற்று மார்த்தாண்டம் வந்தார். அவருக்கு மார்த்தாண்டம் பகுதி வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் சுரேஷ் மேசியா தாஸ், ஏ.ஐ.பி.இ.ஏ நிர்வாகிகள் லிஸ்பின் போஸ், அருள் பிரதீப், ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Marthandam ,central government ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்