- வடக்கு மாநில
- தண்டையார்பேட்டை
- சென்னை விமான நிலையம்
- விம்கோ நகர்
- தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம்...
தண்டையார்பேட்டை, பிப்.19: சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் பெண் இன்ஜினியர் ஒருவரிடம் போதை வாலிபர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் இன்ஜினியர் அலறிக் கூச்சலிட்டார்.
இதையடுத்து, சக பயணிகள் போதை வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அனில் சவுத்ரி(25) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து அணில் சவுத்ரியிடம் விசாரித்து வருகின்றனர்.

