×

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

 

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பிப்.20 முதல் மார்ச் 2 வரை விருப்ப மனுவை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000 செலுத்த வேண்டும். விண்ணப்ப படிவத்தை ரூ.1,000 வீதம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Dimuka ,Tamil Nadu and Puducherry Assembly ,Secretary General ,Duraimurugan ,Chennai ,Tamil Nadu and Puducherry Assembly elections ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில்...