×

இளைஞர்கள், முதியோர்கள் மனநலத்தை ஊக்குவிக்க மகிழ்ச்சி, பொழுது போக்குப்பிரிவு: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

 

சென்னை: இளைஞர்கள், முதியோர்களின் மனநலத்தை ஊக்குவிக்க ரூ.1 கோடி செலவில் மகிழ்ச்சி, பொழுதுபோக்குப் பிரிவு ஏற்படுத்தப்படும் என மாநராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களுக்குட்பட்ட 50 மயான பூமிகளில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் மயான பூமி வளாகத்தை நவீன முறையில் மேம்படுத்த ரூ. 50.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 6 இடங்களில் வீடற்றோர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய இரவு காப்பகம் மொத்தம் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயரும் தொழிலாளர்கள், வீடில்லாத நபர்கள் / குடும்பங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு 200 தற்காலிக /இடைநிலை தங்குமிடங்கள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் கௌரவமான வாழ்க்கைக்காக, அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்ய, பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தினருக்கான நலத்திட்டங்கள், பாதுகாப்பு, புகார் தீர்வு மற்றும் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து, கள ஆய்வுகள் மற்றும் சமூகபொருளாதார கணக்கெடுப்புகளின் உண்மைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சமூகச் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த ரூ.1 கோடி மதிப்பீட்டில் “சமூகபொருளாதார மேம்பாட்டுப் பிரிவு” புதிதாக உருவாக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர மக்களின் மனநலம், சமூக இணைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், குழந்தைகளை திரைச் சார்ந்த பழக்கங்களிலிருந்து பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை சார்ந்த கலாச்சார செயல்பாடுகளில், ஆர்வத்தை ஏற்படுத்தவும், இளைஞர்கள் மற்றும் முதியோர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மன,உடல் நலத்தை ஊக்குவிக்கவும், மக்களிடையே அன்பையும், நட்பையும் வளர்க்கும் பொழுது போக்குகளை ஊக்கப்படுத்தவும், பொது மற்றும் பொழுதுபோக்கு இடங்கள், மக்கள் இணையும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை உருவாக்கும் வகையில் ‘மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்குப் பிரிவு பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்படும்.

Tags : Chennai ,Chennai Corporation ,Greater Chennai Corporation… ,
× RELATED திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை..!!