புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தொட்டியம்பட்டி பகுதியில் இடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சடலத்தை, போலீசார் பாதியில் அணைத்து பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொட்டியம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (27) என்பவர் தற்கொலை செய்த நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் இடுகாடு சென்று உடலை எரித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் இடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சடலத்தை, பாதியில் அணைத்து போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
