- 2026 ஓபன் மாஸ்டர்ஸ் விளையாட்டுகள்
- அபுதாபி
- Alanganallur
- ஓபன் மாஸ்டர்ஸ் விளையாட்டுகள்
- ஐக்கிய அரபு நாடுகள்
- இந்தியா
அலங்காநல்லூர், பிப். 18: ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகர் அபுதாபியில், நடப்பு ஆண்டிற்கான ஓபன் மாஸ்டர்ஸ் கேம்ஸ் பிப்.6 முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 115க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு 38 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தடகளம் பிரிவில், இந்தியா சார்பில் மதுரையைச் சேர்ந்த கிஷோர்குமார், 30 வயதினர் பிரிவில் பங்கேற்றார். இவர் ஹாமர் த்ரோ பிரிவில் தங்கப்பதக்கமும், டிஸ்கஸ் த்ரோவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இவர் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரது கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவும், இளம் விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற கிஷோர் குமாரை அவர் பணியாற்றும் நிறுவனம் சார்பில் வெகுவாக பாராட்டினர்.
