பேரையூர், பிப். 18: பேரையூர் தாலுகா, அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் வீரமுருகன் தலைமையில், நேற்று விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பல்வேறு கோரிக்கை முன் வைத்த விவசாயிகள், கூட்டத்திற்கு வருகை தராத அதிகாரிகளைக் கண்டித்தும், பயிட்டுள்ள மக்காச்சோளம் போதிய விளைச்சலின்றி, நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியும் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பிரச்னை தொடர்பாக மனுஅளித்து தீர்வு காணும்படி அதிகாரிகள் கூறியதை அடுத்து, அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
