×

கார் மோதி விவசாயி படுகாயம்

வடமதுரை, பிப். 18: திண்டுக்கல் அருகே வி.எஸ்கோட்டை நத்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (70) விவசாயி இவர் நேற்று டூவீலரில் திருச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே டி.என்.பாறைப்பட்டி பிரிவில் சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியே வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஆண்டிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Vadamadurai ,Andichamy ,V.Eskottai Nathamanayakkanpatti ,Dindigul ,Trichy-Dindugal ,T.N. Paraipatti ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்