- வத்மதுரை
- வேதாசந்தூர்
- சுரேஷ் பாபு
- வடக்கு மதுரை
- ஈ. டி.
- மணிகண்டன்
- பேரிப்தி
- சக்திவலே
- வடமாதுரா
- வடமதுரை
- வாதியா ரெட்டிபாரி
வடமதுரை/ வேடசந்தூர், பிப். 18: வடமதுரை எஸ்ஐ சுரேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த டி.பாறைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (51), வடமதுரையை சேர்ந்த சக்திவேல் (42), பெரிய ரெட்டியபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (41), கந்தமநாயக்கனூரை சேர்ந்த மாணிக்கம் (55) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 104 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வேடசந்தூர் எஸ்ஐ பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நாகர்கோனனூர் பஸ் ஸ்டாப் பகுதியில் அதே ஊரை சேர்ந்த மதுபாலன் (28) மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
