கொடிகள்தஞ்சாவூர், பிப்.18: தஞ்சை சிவகங்கை பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலக சுற்றுச்சூழலில் செடி கொடிகள் அதிக அளவில் மண்டி கிடப்பதால் கட்டிடங்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பகுதியில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்வித்துறை அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம், அறநிலையத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை புகழ்பெற்ற சிவகங்கை பூங்காவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள சுற்றுச்சூழல் முழுவதும் செடி கொடிகள் மண்டி சேதமடைந்து உள்ளது. அது பழமையான கட்டிடம் என்பதால் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் விடுமுறை நாட்களில் சிவகங்கை பூங்காவுக்கு குழந்தைகள் உட்பட முதியோர்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு அங்கு மண்டி உள்ள செடி, கொடிகளை அகற்றி சுற்றுச்சூழலை வளப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
