×

ஆவணத்தில் மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பேராவூரணி, பிப்.18: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில், அல் ஹிக்மா மக்தப் மதரஸா பரிசளிப்பு மற்றும் ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். மாவட்ட பேச்சாளர் மௌலவி அதீக் ரமலானும், ஈரானும் என்ற தலைப்பில் பேசினார். ரமலான் மாத நோன்பு சட்டதிட்டங்கள் குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மதரஸா மாணவ, மாணவிகளுக்கு ரமலான் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Awanam ,Peravoorani ,Tamil Nadu Thowheed Jamaat Thanjavur South District Awanam Branch ,Al Hikma Maktab Madrasa ,Ramadan ,Masjidur Rahman Juma Mosque ,District Secretary ,Awanam Riyas… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்