- கலைஞர் கனவு இல்லம்
- மயிலங்கொன்பட்டி பஞ்சாயத்து
- கரம்பாக்குடி
- கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம்
- புதுக்கோட்டை மாவட்டம்
கறம்பக்குடி, பிப். 18: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சியில் அனைத்திலும் அரசு அறிவிப்பின் படியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரிலும், கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு செய்வது, தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அனைத்து ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபையில் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிப்பதற்காக கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இந்த ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராம சபை கூட்டத்தில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தூய்மை பாரதம் வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, மைலன்கோன்பட்டி ஊராட்சியில் கலந்து கொண்டு தலைமை வகித்தார். மைலன்கோன்பட்டி ஊராட்சியில் 2025ம் ஆண்டு, 2026ம் ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி திட்ட பணிகள் ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மைலன்கோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
