×

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

புதுக்கோட்டை, பிப். 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2026ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

எனவே, புதுக்கோ ட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் – உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Farmers' Grievance Redressal Day ,Pudukkottai ,Redressal Day ,Pudukkottai District Collector ,Conference Hall ,Pudukkottai District Collector.… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்