×

விஏஓ தாக்கப்பட்ட சம்பவம் அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப்.18: அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஈஞ்சார் கிராம உதவியாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . விருதுநகர் மாவட்டம் ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆகியோரை தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை கண்டித்து அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் உமா சங்கர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : VAO ,Association of Village Administrative Officers ,Ariyalur ,Ariyalur Revenue Collector's Office ,Enjar ,administration officers ,Virudhunagar ,District ,Enjar Village ,Administrative Officer ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்