×

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ.20.44 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணிகள்

ஜெயங்கொண்டம், பிப்.18: ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ.20.44 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் ஒன்றியம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-26ன் கீழ், அங்கராயநல்லூர் ஊராட்சி சிலால் கம்பளத்தார் தெருவில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல்,

ஆமணக்கந்தோண்டி ஊராட்சி புதுச்சாவடி ராஜகம்பளத்தார் தெருவில், ரூ.10.44 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி (வ.ஊ), பிரபாகரன் (கி.ஊ), ஜெயங்கொண்டம் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் தனசேகர் (மேற்கு), மணிமாறன் (மத்தியம்) மற்றும் அரசு அலுவலர்கள்,கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Jayankondam union ,Jayankondam ,Jayankondam MLA ,Kannan ,Angarayanallur Panchayat Silal… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்