- கடம்போடுவழு புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு விழா
- Kalakkadu
- கடம்போடுவழு செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- திருச்சி
- செயிண்ட் ஜோசப் கல்வி குழு
- உதவி பேராசிரியர்
- ரமேஷ்
- தமிழ் செல்வன்
- துணை தலைவர்
- கிங்ஸ்லி மோசஸ்…
களக்காடு,பிப்.18: களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்வி குழும உதவி பேராசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி சேர்மன் தமிழ்செல்வன், துணை சேர்மன் கிங்ஸ்லி மோசஸ் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் டாக்டர் ரெபேக்கா மனோன்மணி, ஆண்டறிக்கை வாசித்தார். அதனைதொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் களக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜசேகர், அன்றெவ் பெல், கராத்தே, யோகா பயிற்சியாளர் யூசுப் அலி, நடன பயிற்சியாளர் முஸ்தபா, இசை பயிற்சியாளர் ஜூலி பரத், சிலம்பம் பயிற்சியாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
