×

நாங்குநேரியான் கால்வாயில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிக்கு புதிய கால்வாய்

களக்காடு,பிப்.18: நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், நெல்லை தொகுதி எம்பி ராபர்ட்புரூஸிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: களக்காடு ஒன்றியம் கள்ளிகுளம் பஞ்சாயத்தில் 6 குளங்களும், தாழைகுளம், கரந்தாநேரி, பாணாங்குளம் பகுதிகளில் 4 குளங்களும் உள்ளன. இந்த 10 குளங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 10 குளங்களுக்கும் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. பிரண்ட மலை மற்றும் அப்பகுதியில் பெய்யும் மழை நீரால் தான் குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் குளங்கள் நிரம்புவதில்லை. எனவே பிரண்ட மலை அருகே செல்லும் நாங்குநேரியான் கால்வாயில் தடுப்பணை அமைத்து, கள்ளிகுளம், தாழைகுளம், கரந்தாநேரி பகுதிகளில் உள்ள 10 குளங்களுக்கும் புதிய கால்வாய் அமைக்க வேண்டும். மேலும் சிதம்பரபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்வீதிக்கால் மூலம் பாசனம் பெறும் 16 குளங்கள் பயன் பெறும் வகையில் புதிய அணை கட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Nanguneriyan ,Kalakkadu ,Former ,Nellai East District Congress ,President ,Tamilselvan ,Nellai ,Robert Bruce ,Kallikulam Panchayat of Kalakkadu Union ,Tharaikulam ,Karanthaneri ,Panangulam ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்