×

ஆயுதங்களுடன் 4 பேர் கைது

தூத்துக்குடி, பிப். 18: தூத்துக்குடி மொட்டக்கோபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொட்டக்கோபுரம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை பிடித்தனர். அவர்களிடம் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து போலீசார், அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள், மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜ் நகரை சேர்ந்த மனோவரோஸ்(27), கட்டிட தொழிலாளி கார்த்திக்(23), பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்த வெம்பன்ராஜா(19), ராமதாஸ்நகரை சேர்ந்த சரவணக்குமார்(23) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.

Tags : Thoothukudi ,Mottakopuram ,Thalamuthunagar police ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்