×

இந்து முன்னணியின் முதல் மாநில தலைவர் பிறந்த நாள் விழா

ஏரல், பிப். 18: ஏரலில் இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 111வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருவேலம் தலைமை வகித்தார். இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் அருணாசலம் முன்னிலை வகித்தார். ஏரல் நகர பொதுச்செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தாணுலிங்க நாடார் பெருமைகளை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய தலைவர் கோபி, செயலாளர் சிவசுந்தரம், இந்து அன்னையர் முன்னாணி பொறுப்பாளர்கள் பிரம்மசக்தி, உமா, கலா ரேவதி, பூர்ணிமா, பாஜ ஒன்றிய செயலாளர்கள் தேவராஜ், பழனி, பரமசிவம், அணி மண்டல தலைவர்கள் கணேசன், விஜயராகவன், விவசாய அணி ராஜ்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெயராணி, ஒன்றிய தலைவர் செல்வசங்கர், காயல் மண்டல பொறுப்பாளர் அர்ஜூன் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் மகாலட்சுமி, வரதராஜன், விவசாய அணி துணை தலைவர் குட்டி, நவநீதகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி ஏரல் நகர தலைவர் தர் நன்றி கூறினார்.

Tags : president ,Hindu Front ,Airal ,Thanulinga Nadar ,Karuvelam ,Hindu Front South District ,Arunachalam ,Airal City ,General ,Secretary… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்