×

புளி பறிப்பதற்காக மரத்தில் ஏறிய தொழிலாளி கீழே விழுந்து சாவு

மார்த்தாண்டம், பிப்.18: களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜ் (50). தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மரத்தில் புளி பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த டேவிட் ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டேவிட் ராஜ் இறந்தார். இது குறித்து அவரது மனைவி மல்லிகா (40) களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marthandam ,David Raj ,Mekodu ,Kaliyakavilai ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்