×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
செஞ்சாரு: இந்த திட்டத்தை 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கவும், ஆண்டுக்கு ரூ.12,000 (மாதம் ரூ.1,000) தொகையால் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ உதவவும் இந்த தொகை வழங்கப்படுகிறது.

குறிப்பாக மாதம் ரூ.1,000 (ஆண்டுக்கு ரூ.12,000) நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால், அன்றாட செலவுகள், குழந்தைகள் கல்வி, உடல்நலம், சிறு தேவைகளுக்கு சொந்தமாக குடும்பத் தலைவிகள் செலவிட முடிகிறது. ‘உதவித் தொகை’ அல்லாமல் ‘உரிமைத் தொகை’ என பெயரிடப்பட்டதால், பெண்கள் தங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் பெறுவதாக உணர்கின்றனர். ஏழை, நடுத்தர குடும்பங்களில் பெண்களின் முடிவெடுக்கும் அதிகாரம் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு, ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களுக்கு, ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு, இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் உரிமை தொகை வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 1 கோடிக்கும் மேல் பயனாளிகளுடன் தொடங்கி, தற்போது 1.31 கோடி வரை விரிவடைந்து, பல லட்சம் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.

* ரூ.35,000 கோடி ஒதுக்கீடு
இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 13,000 கோடி மேல் நிதி ஒதுக்கப்படுகிறது. 2023 முதல் 2025 நவம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.35,741 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.30,838 கோடி வழங்கப்பட்டது.

* ஒரே நேரத்தில் ரூ.5000
தேர்தல் வருவதால் ரூ.1000 உரிமைதொகையை நிறுத்த அதிமுக, பாஜ முயற்சித்ததால், பிப்-ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3,000 மற்றும் கோடை சிறப்பு ரூ.2,000 என ரூ.5,000 ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கி கணக்கில் வரவு வைத்து பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனாளிகள் விவரம்
ஆண்டு பயனாளிகள்
2023 1.13 கோடி பெண்கள்
2024 1.20 கோடி பெண்கள்
2025 1.30 கோடி பெண்கள்
2026 1.31 கோடி பெண்கள்

* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக
பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன்
(பாஜ தலைவர்) சென்னை
பெ.சண்முகம்
(சி.பி.எம்.மாநில செயலாளர்) நாமக்கல்
மு.வீரபாண்டியன்
(சி.பி.ஐ. மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன்
(வி.சி.க தலைவர்) கேரளா
பிரேமலதா (தேமுதிக
பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்
(தமாகா தலைவர்) சென்னை
சீமான்
(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்.

* 4 நாட்களில் ஒரு கோடி வியூவ்ஸ்: டிரெண்டாகும் திமுக பிரசார பாடல்
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திமுக சார்பில் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பாடல் கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடந்த வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் இப்போது ‘டிரெண்ட்’ ஆகி வருகிறது. அது மட்டுமல்லாமல், யூடியூப் தளத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 1 கோடி பார்வையாளர்களை கடந்த அரசியல் பாடலாக உருவெடுத்திருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் திமுக வெளியிட்ட ‘ஸ்டாலின் தான் வர்றாரு’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது. திரைப்பட பாடல்களை முணுமுணுப்பதைப் போல இந்த பாடலை அப்போது பலர் முணுமுணுத்து வந்தனர்.

அதேபோல, வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காகவும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு பாஜவால் ஆபத்து என்பதைச் சொல்லும் வகையில் ‘பெரும் பெரும் பருந்து வரும் வரும் ஒளிந்து நடிப்பினைப் புரிந்து துறத்துவோம் துணிந்து’ என்று தொடங்கும் பாடல் ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற திமுகவின் தேர்தல் பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் இலக்குடன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் திமுகவின் மேடைகள்தோறும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. திமுகவினர் சிலர், இந்த பாடலை தங்களது மொபைல் போனில் ரிங் டோனாகவும் வைத்து வருகின்றனர்.

Tags : Sencharu ,DMK ,2021 assembly elections ,M.K. Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க…