×

கோவை ஈஷா மையம் சிவராத்திரி விழாவில் முப்படை அதிகாரிகள் பங்கேற்றது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: மு.வீரபாண்டியன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்நிலையில் இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் சிவராத்திரி விழாவில் ராணுவ சீருடையுடன் கலந்து கொண்டுள்ளனர். ஒன்றிய பாஜ அரசின் அழுத்தத்தின் காரணமாக, முப்படை உயரதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும், இந்தியாவின் ராணுவம் மதச்சார்பற்ற ராணுவமாகும். அவ்வாறு இருக்கின்றபோது முப்படை உயர் அதிகாரிகள் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி விழாவில் சீருடையுடன் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது.

Tags : Govai ,Isha ,Centre Shivaratri Festival ,Veerapandian ,Chennai ,Secretary of State ,India ,Minister ,Rajnath Singh ,Shivratri ,Isha Yoga Centre ,Goa ,
× RELATED சொல்லிட்டாங்க…