×

ராஜஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் பலி..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பிவாடியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானின் கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரில் ஆடை தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. அந்த தொழிற்சாலை உரிமையாளரால் வாடகைக்கு விடப்பட்டிருந்தது, அங்கு குத்தகைதாரர் சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் இன்று காலை 9 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தன. இதனால் தீ வேகமாக தீவிரமடைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர கடின முயற்சிக்குப் பிறகு, தீயை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது மூன்று முதல் நான்கு முறை பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த தொழிலாளர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள். மேலும் 2 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags : Rajasthan ,Jaipur ,Bhiwadi, Rajasthan ,Bhiwadi ,Kaithal-Tijara district ,
× RELATED ஆந்திரப் பிரதேச செயலகத்தில் முதல்வர்...