×

அரியலூரில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு

அரியலூர், பிப். 16: அரியலூரில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் மனுக்கள் அளித்து பயனடைய செயற்பொறியாளர் அய்யனார் அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (17 ம் தேதி) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur ,Executive ,Ayyanar ,Tamil Nadu Electricity Generation and Distribution Corporation ,Rajaji Nagar ,College Road ,Ariyalur… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்